முதலாம் இராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு, மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூரும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவுடன் ஜூலை 23 முதல் இன்று வரை ஆடி திருவாதிரை விழா ஐந்து நாள் கொண்டாட்டமாக நடைபெறுகிறது. இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
பின்னர் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்கிறார். வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி கொண்டு வரும் கங்கை நீரைப் பயன்படுத்தி பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலில் சில நிமிடங்கள் தியானம் செய்யவும், கோயில் சிற்பங்களையும், இந்தியத் தொல்லியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிடுகிறார். விழாவின் முக்கிய நிகழ்வாக, பிரதமர் மோடி இராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இது சோழப் பேரரசின் பங்களிப்பைப் பறைசாற்றுவதற்கு முக்கியமான மைல்கல்.

இதனிடையே, தஞ்சாவூரில் உள்ள தென் மண்டல கலாச்சார மையத்தின் ஆதரவுடன், தேவாரம் திருமுறை பயிற்சி பெற்ற மாணவர்களால் பாடப்படுகிறது. கலாஷேத்ரா கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், பாரம்பரிய ஓதுவார்களின் தேவாரப் பாடல்களும் இடம்பெறுகின்றன.
இதையும் படிங்க: ஓபிஎஸுக்கு நோ சொன்ன பிரதமர் மோடி.. ஹேப்பி மோடில் எடப்பாடி..!
பத்மபூஷன் இளையராஜா மற்றும் அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது, இது விழாவிற்கு மேலும் பொலிவு சேர்க்கிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க, திருச்சியில் நட்சத்திர விடுதியில் இருந்து பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார். பிரதமர் மோடி விடுதியில் இருந்து ரோடு ஷோவாக மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.
அப்போது சாலையில் பா.ஜ.க.வினர்., அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்றடைந்தார் பிரதமர் மோடி. அங்கு அவருக்கு, ஆளுநர் ஆர். என். ரவி, எல். முருகன் அமைச்ச தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்றனர். வேட்டி, சட்டையில் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பிரதமர் மோடி சோழ தேசத்தை சென்றடைந்தார்.
இதையும் படிங்க: 2 நாள் பயணம்.. தமிழகம் வரும் பிரதமர் மோடி.. இதற்காக தான்..!!