தேர்தல் நெருங்கும் வேளையில் 15000 கோடி ரூபாய்க்கு 4385 டெண்டர்களை வெளியிட்டுள்ள திமுக அரசு கமிஷன் பெறுவதிலேயே குறியாக இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி இருக்கக்கூடிய நிலையில் பிப்ரவரி மாதம் பிறந்து 12 நாட்களில் 15000 கோடிக்கும் அதிகம் மதிப்புள்ள பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகளை தமிழக அரசு கிட்டத்தட்ட 4385 ஒப்பந்த புள்ளிகளை வெளியிட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருக்கின்றார்.
ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை சார்பிலே கிழக்கு கடற்கரை சாலை திருவான்மையூர் முதல் உத்தண்டி வரை 2100 கோடிக்கு அதிகமான அந்த உயர்மட்ட சாலை அமைப்பதற்குரிய ஒப்பந்தம் அவசர அவசரமாக வழங்கப்பட்டது. அதில் 700 கோடி வரை ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒப்பந்த புள்ளிக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பது உள்ளிட்டவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி இருக்கக்கூடிய அன்புமணி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் 2000 கோடி நிதியை பயன்படுத்தி அதற்கான ஒப்பந்தங்களை இப்போதே கோறிவிட்டது திமுக அரசு என்றும் குற்றம் சுமத்தி இருக்கின்றார்.
இதையும் படிங்க: ஓயாத பிரச்சனை..! அன்புமணிக்கு ஏன் அங்கீகாரம்? டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்..!
திமுக அரசு இப்படி மின்னல் வேகத்தில் தேர்தல் நெருங்கி இருக்கக்கூடிய சூழ்நிலையில் பல்லாயிரக்கணக்கில் ஒப்பந்தங்களை வழங்குவதற்கு பின்னணியில் இருப்பது மக்கள் நலன் அல்ல கொள்ளையடிக்கும் குணம்தான் என்று குற்றம் சாட்டி இருக்கக்கூடிய அவர் திமுக ஆட்சியிலே ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் குறைந்தபட்சம் 20% கமிஷன் பெறப்படுகின்றது. அப்படி என்றால் கடந்த 10, 12 நாட்களில் ஒப்பந்தமிடப்பட்டிருக்கக்கூடிய இந்த 15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் மூலம் ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு கிடைத்திருக்கும் என்று மக்கள் யோசிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சா எப்படி? தீர்ப்பு எங்க பக்கம் தான்..! ராமதாஸ் உறுதி..!