• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாதிவாரி சர்வே நடத்த ஜூன் 5ல் பாமக அனைத்துக் கட்சி கூட்டம் - அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    "தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கவும் ஜூன் 5-ஆம் தேதி சென்னையில் பா.ம.க. சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்" என்று அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 29 May 2026 20:15:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Chief Anbumani Ramadoss Calls for All-Party Meeting on June 5 for Caste Census

    தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களை முறியடிக்கவும், சமூகநீதியை மேம்படுத்தவும் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது கட்டாயம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து விவாதிக்க பாமக சார்பில் வரும் ஜூன் 5ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும் என்றும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள மிக முக்கியமான அறிக்கையில், "இந்தியாவிலேயே சமூகநீதியில் தலைசிறந்து விளங்கி, ‘சமூகநீதியின் தொட்டில்’ என்று போற்றப்பட்ட தமிழ்நாடு, அண்மைக்காலமாக உரிய முன்னெடுப்புகள் இல்லாததால் இந்த விவகாரத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1931ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையிலேயே இன்றும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், சுமார் 95 ஆண்டுகள் பழமையான இந்தத் தரவுகளை ஏற்க உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் மறுத்து வருவதால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனப் பல பத்தாண்டுகளாக பாமக தொடர்ந்து போராடி வருகிறது. அதன் விளைவாக, 2027ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இருப்பினும், மத்திய அரசு எடுக்கும் மேக்ரோ தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு மாநிலங்களில் முழுமையான சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதால், ஒவ்வொரு மாநிலமும் தங்களின் தேவைக்கேற்ப சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பை நடத்த வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் தனது அறிக்கையில், "ஏற்கனவே பிகார், தெலுங்கானா, ஒதிஷா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இத்தகைய சாதிவாரி சர்வேக்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. அதன் தரவுகளின் அடிப்படையில் அம்மாநிலங்களில் இட ஒதுக்கீட்டின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் சாதிவாரி சர்வே நடத்த முழு அதிகாரம் உண்டு என நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன. தமிழ்நாட்டில் மனிதவளமோ அல்லது நிதி ஒதுக்கீடோ இதற்கு ஒரு தடையே இல்லை. கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைக்க சாதிவாரி சர்வே மேற்கொள்ளப்படும்’ என்பதை தங்களின் முதல் வாக்குறுதியாக அறிவித்திருந்தனர். தற்போது தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசு அமைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு இந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: 10 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்!

    இறுதியாக, "தமிழக சட்டப்பேரவையில் விரைவில் நடைபெறவுள்ள ஆளுநர் உரையின் போது, ‘தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களில் இதற்கான களப்பணிகளைத் தொடங்க வேண்டும். தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக இந்தச் சமூகநீதி சர்வேயை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் ஜூன் 5ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரம்மாண்ட கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு அனைத்துக் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்களுக்கும் தனித்தனியாக விடுக்கப்படும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக ஆளுங்கட்சி கூடாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: கடைசி நேரத்தில் மாற்றம்.. 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்ட தொடக்கவிழா திடீர் ரத்து!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: 10 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்!

    தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: 10 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்!

    தமிழ்நாடு
    மகள் திருமணம்.. பிரதமர் மோடிக்கு நேரில் பத்திரிகை வைத்த குஷ்பூ - சுந்தர் சி தம்பதி!

    மகள் திருமணம்.. பிரதமர் மோடிக்கு நேரில் பத்திரிகை வைத்த குஷ்பூ - சுந்தர் சி தம்பதி!

    தமிழ்நாடு
    விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன்: தளபதி பெயரை காப்பாற்றுவோம் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன்: தளபதி பெயரை காப்பாற்றுவோம் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    TNGASA 2026: விடுபட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆன்லைன் போர்ட்டல் ஓபன்!

    TNGASA 2026: விடுபட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆன்லைன் போர்ட்டல் ஓபன்!

    தமிழ்நாடு
    ஜூன் மாதம் பிறக்கப்போகுது.. அமலுக்கு வரும் புதிய விதிகள் என்னென்ன..??

    ஜூன் மாதம் பிறக்கப்போகுது.. அமலுக்கு வரும் புதிய விதிகள் என்னென்ன..??

    இந்தியா
    VIP தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க முடியாதா..? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி..!!

    VIP தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க முடியாதா..? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share