சேலம் வடக்கு தொகுதியில் நள்ளிரவில் பாமகவினர் வாக்காளர்களுக்கு சேலை வழங்கியதால் பரபரப்பு; அதிகாரிகளை கண்டதும் சேலைகளை சாலையில் வீசிவிட்டு ஓட்டம். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என நள்ளிரவில் திமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
தமிழக சட்டசபை தேர்தல் நாளை காலை (23/04) நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சி, புதுஏரி செல்லும் சாலையில் வாக்காளர்களுக்கு சேலை வினியோகம் செய்யப்படுவதாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பறக்கும்படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகளை பார்த்தததும் , ஐம்பதுக்கும் மேற்பட்ட சேலைகளை சாலையிலேயே போட்டுவிட்டு அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். விசாரணையில் வாக்காளர்களுக்கு சேலைகள் வழங்கியது பாமகவினர் என தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தி.மு.க.வினர் பலர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் வாக்காளர்களுக்கு சேலை வினியோகம் செய்த , பாமக வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நமக்காக பிரசாரம் பண்ணுறாங்க!! பிரேமலதாவுக்கு நன்றி!! உண்மை உறங்காது என அடித்து ஆடும் இபிஎஸ்!
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சதாசிவம் மற்றும் பா.ம.க.வினரும் திரண்டு வந்து தங்ளுக்கு சம்பந்தம் இல்லை என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இவரை எடுத்து சேலைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் , நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இரு தரப்பை நிறையும் அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவில் பாமக வினர் , சேலைகள் வினியோகம் செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இதையும் படிங்க: திமுகவுக்கு 20 தொகுதி கூட கிடைக்காது!! அடித்துச் சொல்லும் இபிஎஸ்!! எடப்பாடியில் இறுதிக்கட்ட பிரசாரம்!