இந்திய இலக்கிய உலகின் மிக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஞானபீட விருது, வைரமுத்து அவர்களுக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத் துறைக்கு இவ்விருது வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது வைரமுத்துவின் இலக்கியப் பங்களிப்பிற்காகக் கிடைத்துள்ள இந்த அறிவிப்புத் தமிழ்ச் சமூகத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழ் மொழியில் இதுவரை 1975-ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன் அவர்களுக்கும் (சித்திரப்பாவை), 2002-ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கும் ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விருதைப் பெறும் மூன்றாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையை வைரமுத்து பெறுகிறார்.
செம்மொழியான தமிழுக்கு ஞானபீட விருது வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது" என வைரமுத்து உள்ளிட்ட பல அறிஞர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர். கடைசியாக 58-வது விருது சமஸ்கிருத அறிஞர் ராம்பத்ராசாரியா மற்றும் குல்சாருக்கும், 59-வது விருது வினோத் குமார் சுக்லாவிற்கும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 60-வது விருது வைரமுத்துவைத் தேடி வந்துள்ளது.
இதையும் படிங்க: சிங்காநல்லூர் கேட்கும் அண்ணாமலை! பல்லடம் தரும் எடப்பாடி! தேஜ கூட்டணியில் டொகுதி பங்கீடு இழுபறி!

கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப் போர் போன்ற நவீன இலக்கியப் படைப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான திரையிசைப் பாடல்கள் மூலம் தமிழ் மொழியை உலகத் தரத்திற்கு உயர்த்தியமைக்காக இவ்விருது வழங்கப்படுவதாகத் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
இந்த உயரிய விருதுடன் ₹11 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் கலைமகளின் (வாவ்தேவி) வெண்கலச் சிலை வழங்கிக் கௌரவிக்கப்படும்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் வைரமுத்துவுக்குத் தங்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். "இந்த விருது எனக்கல்ல, நான் நேசிக்கும் தமிழ் மொழிக்குக் கிடைத்த அங்கீகாரம்" என வைரமுத்து தனது முதல் எதிர்வினையைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளின் அக்கவுண்டில் ரூ.2000 கிரெடிட்..!! தெரிந்துகொள்வது எப்படி..??