தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது ஒரு நீண்டகால வழக்கமாகும். இத்திட்டம் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாட உதவும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.கடந்த ஆண்டுகளில் இத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற அடிப்படைப் பொருட்கள் இடம்பெற்றன. சில ஆண்டுகளில் ரூ.1000 முதல் ரூ.2500 வரை ரொக்கமும் சேர்க்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணங்களால் சில சமயங்களில் ரொக்க உதவி நீக்கப்பட்டது.

இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டமும் இதனுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.தற்போது, 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையும் படிங்க: பொங்கலுக்கு பரிசுத்தொகையா..?? முதல்வர் ரங்கசாமி சொன்னது என்ன..??
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஆலந்தூரில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் இரண்டு கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகப்படும் 3000 ரூபாய் சேர்த்து வழங்கப்படுகிறது. வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்புடன் 3000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜன.8ம் தேதி.. பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!