2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் போது கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் க. பொன்முடி. அந்தக் காலகட்டத்தில், குறிப்பாக 2007 முதல் 2011 வரை, அவர் துறை அமைச்சராக இருந்தபோது விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு 2012 செப்டம்பரில் பதிவு செய்யப்பட்டது.
பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளப்பட்டதன் மூலம் அரசுக்கு சுமார் 28.38 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டது. இந்தக் குவாரி பொன்முடியின் மகன் கெளதம சிகாமணிக்கும், அவரது உறவினர்கள், நெருங்கிய பழக்கமானவர்கள் ஆகிய ஐந்து பேருக்கும் ஒதுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு.

மொத்தம் ஏழு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. பொன்முடி தனது அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி குடும்பத்தினருக்கு உரிமங்கள் வழங்கியதாகவும், குவாரி உரிம நிபந்தனைகளை மீறி அதிக அளவு செம்மண் எடுக்க அனுமதித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: தீயா வேலை செய்யனும் குமாரு... திமுக நிர்வாகிகளுக்கு பொன்முடி போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!
இந்த நிலையில் செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடியை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் விடுவித்துள்ளது. பொன்முடி கௌதம சிகாமணி இருவரையும் அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்த நிலையில் செம்மண் குவாரி வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன்முடி உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது! கைதிகள் விடுதலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!