சென்னை பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே நாவலடி என்கிற தனியார் ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட்ட போது உணவில் முழு தேரை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றபோது அதில் முழு தேரை இறந்து கிடைந்துள்ளது.

இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது சரிவர பதில் அளிக்காததால் வாடிக்கையாளருக்கும், ஓட்டல் நிர்வாகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்த நிலையில், ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: வெயில் சூட்டை தணிக்க முதல்வர் செய்த செயல்.. டெல்லி கல்லூரியில் வினோதம்!!
இதையும் படிங்க: வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி.. நடவடிக்கை எடுக்கப்படும்.. அமைச்சர் உறுதி..!