ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி "" மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் "" என்ற பெயரில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றும், நாளையும் ராமநாதபுரம் மாவட்டம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் ரோடு ஷோ மற்றும் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இன்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருகை தர உள்ளார். இந்த நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10. 5 சதவீதத்தை மீண்டும் பெற்று தருவேன் என கூறியுள்ளார். இது தேவர் சமுதாயத்தை அழிக்க கூடிய செயல். தேவர் சமுதாயத்தை அழிக்க சதி செய்துவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம் என்ற வாசகங்களுடன் முக்குலத்தோர் தேவர் கூட்டமைப்பு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கீழடியை வெச்சு அரசியல் பண்றாங்க.. PERMISSION வாங்க வேண்டியது திமுக அரசு கடமை - இபிஎஸ்..!
பரமக்குடி முழுவதும் சுவரொட்டிகள் வெட்டப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இன்று பரமக்குடி வரவுள்ள நிலையில் அவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்ல! போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த அஜித் வீட்டிற்கு சென்று இபிஎஸ் ஆறுதல்..!