தேமுதிக ஒரு 0.5 சதவீதக் கட்சி" என எடப்பாடி பழனிசாமி அண்மையில் விமர்சித்ததற்குத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான பதிலடியைக் கொடுத்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக-வுடனான பழைய கூட்டணி ஒப்பந்தத்தை ஆதாரத்துடன் வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பினார்.
எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்துப் பேசிய பிரேமலதா தேமுதிக-வை 0.5% கட்சி என எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். அவருக்கு ஏன் எரிகிறது? எடப்பாடியின் வயிறு எரிந்து கருகும் வாசனை (SMELL) இன்று தமிழ்நாடு முழுவதும் வீசிக் கொண்டிருக்கிறது எனச் சாடினார். தேர்தலுக்குப் பிறகு யாருக்கு எத்தனை சதவீதம் என்பது தெரியும் என்றும், அதுவரை எடப்பாடி பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வெறும் பேச்சோடு நிறுத்தாமல், எடப்பாடி பழனிசாமி முன்னதாகத் தேமுதிக-வுடன் போட்டுக் கொண்ட கூட்டணி ஒப்பந்த நகலைச் செய்தியாளர்களிடம் காண்பித்தார். தேமுதிக - அதிமுக கூட்டணியில் இருந்த பொழுது, தேமுதிக-விற்கு 5 நாடாளுமன்றத் தொகுதி இடங்களும், 1 மாநிலங்களவை (Rajya Sabha) இடமும் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை அவர் வெளியிட்டார். 0.5 சதவீதக் கட்சி என்றால் ஏன் 5 சீட்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தீர்கள்? என எடப்பாடிக்கு நேரடி கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!
விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு தேமுதிக பலவீனமடைந்து விட்டதாகக் கூறப்படுவதைப் புறந்தள்ளிய பிரேமலதா, கேப்டன் உருவாக்கிய இந்த இயக்கம் மக்களின் ஆதரவுடன் பீடு நடை போடும் என்றார். விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விஜயகாந்த் குறித்து உருக்கமாகப் பேசியுள்ள நிலையில், பிரேமலதாவின் இந்த அதிரடி எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தல் களத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விருதுநகரில் களமிறங்கும் விஜய பிரபாகரன்... கோயிலில் வழிபட்டு பிரச்சாரம்... உற்சாக வரவேற்பு..!!