வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தேமுதிக பூத் ஏஜென்ட் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தேமுதிக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையில்லாத தமிழகம் உருவாக்கப்படும் என்றும் தே.மு.தி. க நிர்வாகிகள் யார் பெரியவர் என்ற ஈகோவை மறந்து வரும் தேர்தலில் பணியாற்றினால் வெற்றி என்ற மூன்றெழுத்து நமக்கு பரிசாக கிடைக்கும் என்றும் கூறினார்.
தே மு.தி.க ஆட்சியில் ரேஷன் பொருட்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு தேடி வரும் என்றும் கூறினார். விஜயகாந்த் உயிருடன் இருந்தபோது அவரின் முதுகில் குத்தி விட்டதாகவும் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு பின்னர் இல்லை என்று துரோகம் செய்துவிட்டதாகவும், எத்தனையோ துரோகிகளை நாம் பார்த்து இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தவேகூடாது.. உறுதியாக சொன்ன பிரேமலதா..!! காரணம் இதுதான்..!

நமக்கு எம்பி, எம்எல்ஏக்கள், ஆளுங்கட்சியினர் என்ற எந்தவித ஆதரவும் இல்லை என்று கூறிய பிரேமலதா, நீங்கள் விஜயகாந்தை மனதில் வைத்துக் கொண்டு வெற்றிக்காக போராட வேண்டும் என்றும் கடந்த ஒன்றரை வருடங்களாக விஜயகாந்த் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் தினமும் கண்ணீர் வடிப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், குடியாத்தத்தில் மக்கள் தேடி மக்கள் தலைவன் கேப்டன் என்ற ரத யாத்திரை தொடங்க உள்ளதாக கூறினார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து தொண்டர்களை சந்தித்து பேச இருப்பதாகவும் தெரிவித்தார். முதல் கட்டமாக இந்த நடைபயணம் வரும் 23ஆம் தேதியோடு நிறைவடைவதாகவும், 24ஆம் தேதி கேப்டனின் நினைவு நாள் ஒட்டி கேப்டன் அறக்கட்டளையிலிருந்து நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாகவும் கூறினார்.
இதன்பிறகு 25ஆம் தேதி விஜயகாந்த் பிறந்தநாள் வருவதாகவும், அது தங்கள் கட்சிக்கு திருநாள் என்றும் அவர் பிறந்த நாள் முடிந்ததும் இரண்டாம் கட்ட பிரச்சாரம் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியல்லாம் இல்ல! 100% நட்பு ரீதியான சந்திப்பு... பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!