முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தார்.
தேமுதிக பொருளாளர் சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பிரேம்ல தான் விஜயகாந்த் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ. வேலு ஆகியோரும் உடன் இருந்தனர்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கலைஞருக்கும் கேப்டனுக்கும் இடையேயான பழக்கம் நெடுங்காலமாக இருந்தது என்றும் 100% இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 21ம் நூற்றாண்டிலும் சாதி மோதல்!.. எல்லாரும் வெட்கப்படனும்... டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம்..!
கேப்டனை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்துக்களை பெறுவார் என்றும், முதல்வர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்ததாக தெரிவித்தார். குடும்பம் மற்றும் நட்பு ரீதியாக முதலமைச்சரை சந்தித்ததாகவும் பிரேமலதா விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தேமுதிகவை பலப்படுத்தும் பணியில் தான் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் சுற்றுப்பயணம் உள்ளிட்டவற்றை தொடங்க உள்ளதாகவும் கூறினார். மேலும் கூட்டணி தொடர்பாக மற்றும் இப்போது கருத்து சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, தேமுதிக பொதுவாக அதிமுக அல்லது பாஜக கூட்டணிகளுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளது. 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது, ஆனால் இந்த முறை தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது அரசியல் நிமித்தமான சந்திப்பு கிடையாது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பிரேமலதா விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓட்டு போடவே உரிமை இல்லைன்னா ஜனநாயகம் மட்டும் உயிரோடு இருக்குமா? காங். எம்.பி சரமாரி கேள்வி..!