திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (செப்டம்பர் 3) இன்று சாமி தரிசனம் செய்தார். 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் இந்தக் கோயிலில், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு, புரோகிதர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினரால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.

குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. திரௌபதி முர்மு, கோயிலின் கருவறையில் ஸ்ரீரங்கநாதரை தரிசித்து, சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு, பிரசாதமாக குங்குமம் மற்றும் ரங்கநாதர் திருவுருவப் படம் வழங்கப்பட்டது. மேலும் கோயில் யானையிடம் ஆசி பெற்றார் திரௌபதி முர்மு.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் வருகை: ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று பக்தர்களுக்கு தடை விதிப்பு...!
https://x.com/i/status/1963213106923897182
அகண்ட காவிரி ஆற்றின் நடுவில் அமைந்த இந்தக் கோயில், 236 அடி உயரமுள்ள ஆசியாவின் மிக உயரமான இராஜகோபுரத்திற்கு பெயர் பெற்றது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலத்தில், திரௌபதி முர்மு தனது ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தியாவின் முதல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு, தனது எளிமையான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்தார். அவரது வருகையின் போது, தமிழ்நாடு அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் உரிய மரியாதைகளுடன் அவரை வரவேற்றனர். இந்த தரிசனம், ஸ்ரீரங்கம் கோயிலின் ஆன்மிக முக்கியத்துவத்தை மீண்டும் உலக அரங்கில் வெளிப்படுத்தியது. கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், குடியரசுத் தலைவரின் வருகை இந்தப் புனித தலத்திற்கு மேலும் பெருமை சேர்த்தது.
https://x.com/i/status/1963227875387351222
தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, விமான நிலையம் செல்லும் வழியில், கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் காரில் இருந்து இறங்கி, தன்னைக் காண காத்திருந்த பொதுமக்களிடமும், குழந்தைகளிடமும் நலம் விசாரித்தார். பின்னர் குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கினார். இந்த வீடியோ தர்போட்ப்பு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்தார் சுபான்ஷு சுக்லா..!!