தமிழ்நாடு, இந்தியாவின் முன்னணி பொருளாதார மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்கள் தொழில்நுட்பம், உற்பத்தி, மற்றும் சேவைத் துறைகளில் தொழில்முனைவுக்கு உகந்த இடங்களாக உள்ளன. தமிழக அரசு தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், புதிய தொழில்களை உருவாக்கவும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஸ்டார்ட் அப் வவுச்சர் திட்டம் என்பது தமிழ்நாட்டில் தொழில்முனைவை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய முயற்சியாகும். இத்திட்டம் குறித்து தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், இது தொழில்முனைவோருக்கு நிதி உதவி மற்றும் ஆதரவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,

இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 2025- 26 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டம் மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஸ்டார்ட் அப்களை விரைவாக அளவிடவும் எளிதாக புதுமைகளை உருவாக்கவும் உதவும் வகையில் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: எத்தனால் கலந்த பெட்ரோல்.. எந்த வாகனத்திற்கும் பாதிப்பில்லை.. உறுதியாக சொன்ன அமைச்சர் நிதின் கட்கரி..!!
ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் என 3 ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் வரை கிளவுட் சேவைத்தொகை திருப்பி தரப்படும் என்றும் கூறினார். அமேசான் வெப் சர்வீசஸ், மைக்ரோசாப்ட் அஸூர் போன்ற உலகளாவிய கிளவுட் நிறுவனங்களிடமிருந்து கிளவுட் சேவை செலவுகளில் 5% முதல் 40% வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் இதற்கான பொதுத் செலவு 10 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டார்.
இந்த சேவையை பெறுவதற்கு StartUpTN, ITNT Hub ELCOT STPI FinBlue போன்றவற்றால் பரிந்துரைக்கப்படும் தொடக்க நிறுவனங்கள் தகுதி பெறும் என கூறினார். இந்தத் திட்டமானது இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கு மிகவும் உகந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்த உதவுவதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உங்க அரசியலுக்கு போலீஸ் அதிகாரிகள் பலிகடா! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை…