வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

காலுக்கு தான் குறி.. ஆனா மண்டை ஒடஞ்சி போச்சு! மகனை தந்தையே கொலை செய்த கொடூரம்..!

புதுக்கோட்டையில் இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தந்தையே மகனை அடித்து கொலை செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியில் இளைஞர் ஒருவர் வீட்டின் மாடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயது. கணேசன் என்பவர் மதுபோதையில் அவரது வீட்டில் மொட்டை மாடியில் தூங்குவதற்காக சென்றுள்ளார்.

காலை வெகுநேரமாகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் மோகன்தாஸ் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது தந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து சடலமாக கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து குடும்பத்தினருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு முதற்கட்ட விசாரணையை கணேசனின் குடும்பத்தார்களிடமிருந்தே காவல்துறையினர் தொடங்கினர். 

இதையும் படிங்க: #BREAKING: ED இல்ல மோடியே வந்தாலும் பயப்பட மாட்டோம்.. துணை முதல்வர் உதயநிதி தடாலடி!!

இதில், கணேசனின் தந்தை கிருஷ்ணன் கொலை செய்தது தெரியவந்தது. தினமும் மதுபோதையில் தகராறு செய்து வந்ததால் ஆத்திரத்தில் தாக்கியதாகவும், உடல் முழுவதும் போர்வை போட்டு உறங்கி கொண்டு இருந்ததால், தலை எது, கால் எது என தெரியவில்லை என்றும் காலை தான் குறிவைத்து தாக்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் கிருஷ்ணனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையே மகனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வடகாடு தாக்குதல் சம்பவம்.. ஆட்சியரை வெளுத்துவாங்கிய கோர்ட்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी