புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மாரியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், வடகாடு பகுதியில் இருபிரிவினரிடையே நடைபெற்ற மோதல் தொடர்பான வழக்கில் திருச்சி ஐஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. இன்று நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஏன் வழக்கு விசாரணை நடத்தவில்லை என ஆட்சியருக்கு கேள்வி எழுப்பினர். எனவே ஆட்சியர் மோதல் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்யவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இதையும் படிங்க: தமிழகம், கேரளாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம்.. தேசிய சராசரியை விட இருமடங்கு குறைந்தது..!

பிரச்சனை நடந்த இடத்தில் மே 4 ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரையிலான சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடங்கியது தென்மேற்கு பருவமழை... மீனவர்களுக்கு வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!