முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் என்று வெளியிட்டார். ரகுமான் கான் நூல்கள் மற்றும் அவரது சட்டமன்ற பேருரைகள் அடங்கிய நூல்களை வெளியிட்டார். உலகம் அறியா தாஜ்மஹால்கள் பூப்பூக்கும் இலையுதிர் காலம் உள்ளிட்ட ஐந்து நூல்களை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து, விழாவில் பேசிய முதலமைச்ச ஸ்டாலின், இன்றைக்கும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ரகுமான்கான் என்று கூறினார்.
தன்னுடைய உடல்நிலை குறித்து அக்கறையுடன் நலம் விசாரித்தார் என்றும் ரகுமான்கானின் பேச்சுக்கும் எழுத்துக்கும் ரசிகன் நான் என்றும் கூறினார். ரகுமான் கானை அதிமுகவுக்கு வரச் சொல்லி எம்ஜிஆர் அழைத்த போது, அவர் செல்லவில்லை என்றும் ரகுமான்கான் மீது வெடிகுண்டு வீசப்பட்ட போதிலும் அவர் அஞ்சவில்லை எனவும் கூறினார்.

தொகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அன்பு கொண்டவர் ரகுமான் கான் என்றும் திமுகவில் எத்தனை கோடி பேரை சேர்த்தாலும் கொள்கை பிடிப்போடு வளர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அதிமுகவுக்கு எப்போதும் இரட்டை நிலைப்பாடு சாதாரணம்தான் என்று விமர்சித்த முதல்வர், ஒரு திறமைசாலியை கண்டு கொண்டால் அவர்களை அரவணைக்கும் பழக்கம் கலைஞரிடம் இருந்தது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் தில்லுமுல்லு... திமுக மா.செ.க்களை காய்ச்சி எடுத்த மு.க.ஸ்டாலின்..!
நாட்டை ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக கறுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் நேற்று அமித் ஷா கொண்டு வந்த பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர் மீதான கிரிமினல் வழக்குகள் தொடர்பான மசோதா குறித்து பேசினார். நாட்டை சர்வாதிகாரமாக மாற்ற ஒரு கருப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அன்பு முத்தங்கள்! பெற்றோரின் திருமண நாளில் உதயநிதி உருக்கம்..!