சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற ‘மாணவர்களின் குரல்’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று, சுமார் பத்தாயிரம் மாணவர்களுடன் நேரடி உரையாடல் நடத்தினார். இந்த நிகழ்வு மாணவர்களின் கருத்துக்களைக் கேட்டறியும் வாய்ப்பாக அமைந்ததுடன், ராகுல் காந்தியின் உரையும் கவனத்தை ஈர்த்தது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒரு மாணவர் திருவள்ளுவர் மற்றும் பெரியார் ஆகியோரின் சிந்தனைகளைப் பற்றிப் பேசினார். அப்போது ராகுல் காந்தி அந்த மாணவரிடம், “மோடிக்கு பெரியார் என்ன சொல்லியிருப்பார்?” என்று கேட்டார். மாணவர் உடனடியாக, “மதமும் சாதியும் பெரிதல்ல” என்று பதிலளித்தார். இந்தப் பதிலை ராகுல் காந்தி உன்னிப்பாகக் கவனித்து, மாணவரின் பேச்சைப் பாராட்டினார்.
தொடர்ந்து தனது உரையில் ராகுல் காந்தி, ஒவ்வொரு மாணவரின் மனதிலும் ஜனநாயக உணர்வு இருக்க வேண்டும் என்றும், யாரோ ஒருவர் சொன்னதை அப்படியே பின்பற்றாமல் சுயமாகச் சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “உங்கள் கலை, வரலாறு, மண், பாரம்பரியம் ஆகியவற்றை அறிந்துகொள்ளுங்கள். நம்மைப் பற்றி அறிவதும் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதும் மாணவப் பருவத்தில் கிடைக்கும் முக்கியமான வாய்ப்பு. ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதே மாணவராக இருப்பதன் அடிப்படை அம்சம்” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: “தைரியம் இருந்தா ராஜினாமா செய்ங்க..!” ராகுல் காந்தியை நோக்கி நிதின் நபின் காட்டமான கேள்வி..!!

தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் புதிதாக ஏதேனும் கற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, திருவள்ளுவர் மற்றும் பெரியார் ஆகிய இரு பெரும் ஆளுமைகளைத் தமிழ்நாட்டின் சின்னங்களாகப் போற்றினார். “கேள்வி கேட்பதே வளர்ச்சியின் அடிப்படை. பெரியார் எல்லாவற்றையும் கேள்வி கேட்பார்” என்று அவர் வலியுறுத்தினார்.
https://x.com/RahulGandhi/status/2108909027203940396?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2108909027203940396%7Ctwgr%5E86c78cf6c7f8def9a25188aa7f2e2f50a57302a7%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.oneindia.com%2Fnews%2Fchennai%2Fwhat-would-periyar-have-said-to-modi-rahul-ask-to-students-in-chennai-chhatron-ki-goonj-837287.html
மேலும், வாக்குத்திருட்டு ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும், தமிழ் கலாசாரம், வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றின் மீது முழு அளவிலான தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தமிழக மக்கள் மீது இந்தி திணிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், “இந்தியைத் திணிப்போம் என வெளிப்படையாகச் சொன்னவர் அமித் ஷா” என்று குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்த அவர், “தமிழ்நாட்டைத் தொட யாரையும் விட மாட்டோம்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
மாணவர்களின் சுதந்திரமான சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்த இந்த உரையாடல், தமிழ்நாட்டின் அரசியல், கலாசார அடையாளங்கள் குறித்த விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தியது.
இதையும் படிங்க: சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!