ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரை என்பது இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையையும், நியாயத்தையும் உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான அரசியல் முயற்சியாகும். இந்த யாத்திரை, குறிப்பாக பீகார் மாநிலத்தில், வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
வாக்காளர் அதிகார யாத்திரையின் முதன்மை நோக்கம், தேர்தல் முறைகேடுகளை எதிர்ப்பது மற்றும் வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது. முறைகேடுகளை அம்பலப்படுத்துவதோடு, மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சிகளுக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது. ராகுல் காந்தி இந்த யாத்திரையை அரசியல் சாசனத்தைக் காக்கும் போராட்டம் என்று ராகுல் காந்தி கூறி இருந்தார்.

இந்த யாத்திரையை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகஸ்ட் 17 அன்று பீகாரின் சசாரம் பகுதியிலிருந்து தொடங்கினார். இன்று பூரணியாவில் யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, யாத்திரை மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் மக்கள் இயல்பாகவே வருவதாகவும் தெரிவித்தார். வாக்குத் திருட்டு பற்றி நாங்கள் என்ன சொன்னாலும் பீகாரின் கொடிக்கணக்கான மக்கள் அதை நம்புகிறார்கள் என்றும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது என்றார்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரட்டும்.. தேர்தல் ஆணையத்துக்கு அப்ப இருக்கு கச்சேரி! ராகுல் காந்தி திட்டவட்டம்..!
தேர்தல் ஆணையத்தின் பணி சரியான வாக்காளர் பட்டியலை வழங்குவது ஆனால் அவர்கள் மகாராஷ்டிரா அரியானா மற்றும் கர்நாடகாவில் அதை செய்யவில்லை என தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் நடத்தையை மாற்றுவதே தங்கள் முழு அழுத்தம் என்றும் பீகாரில் தேர்தலை திருடன் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். கர்நாடகாவில் வாக்குகள் திருடப்பட்டதை தெளிவாக தங்கள் எடுத்துக்காட்டியதாகவும் இங்கு நடக்க அதனை அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இப்படியா அவமதிப்பீங்க? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. தேர்தல் ஆணையம் கறார்..!