தேர்தல் ஆணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் வாக்குகள் திருடப்படுவதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
போலி வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்படுவதாக ராகுல் காந்தி சந்தேகத்தை முன் வைத்துள்ளார். கருத்துக்கணிப்புகளுக்கும் தீர்வு முடிவுகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் திடீர் திடீரென தேர்தல் தேதிகள் மாற்றப்படுவது சந்தேகத்தை அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் கூறினார். மேலும் பாஜக நடத்தும் தேர்தல் முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
இதையும் படிங்க: அமித்ஷா குறித்து அவதூறு பேசிய வழக்கு.. ராகுல்காந்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய கோர்ட்..!!
வாக்களித்த வாக்காளர்களின் விவரங்கள் பூத் வீடியோ பதிவுகளை தேர்தல் ஆணையம் வழங்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, மின்னணு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கினால் 30 வினாடிகளில் மோசடியை கண்டறியலாம் என்று தெரிவித்தார். மேலும் வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி அரசியலமைப்பை படிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு புத்தகத்தை சுமந்து திரியும் ராகுல்காந்தி, அதைத் திறந்து படிக்க வேண்டும் என்று கூறினார்.
அரசியலமைப்பு சட்டம் இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை என்று தெரிவித்தார்.
ஊடுருவல்காரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா., இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். பீகார் மக்களின் வேலையை பறிக்கும் வங்கதேசத்தினரை காப்பாற்ற ராகுல்காந்தி விரும்புகிறார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை எம்.பி-யிடம் செயின் பறிப்பு.. அமித்ஷாவுக்கு பறந்த கம்ப்ளைன்ட் லெட்டர்..!