மழைக்காலங்களில் மின்சாரம் தாக்குவது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு முக்கிய பிரச்சினையாகும், குறிப்பாக அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் மற்றும் வீட்டில் உள்ள மின்சார சுவிட்சுகள் போன்றவை இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கின்றன. மழைக்காலத்தில் ஈரப்பதம், வெள்ளம் மற்றும் புயல் போன்ற இயற்கை நிகழ்வுகள் மின் கசிவு மற்றும் மின்சார தாக்குதலுக்கு வழிவகுக்கின்றன.
மழைநீர் மற்றும் காற்றின் வேகம் மின் கம்பிகளை பலவீனப்படுத்தி, அவை அறுந்து தரையில் விழுவதற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் மின்சாரத்தை தொடர்ந்து கடத்துவதால், அவற்றைத் தொட்டால் அல்லது அருகில் நடந்தால் கூட மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. மழைநீர் மின்சாரத்தை எளிதில் கடத்துவதால், ஈரமான தரையில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் மிகவும் ஆபத்தானவை.

பருவமழை காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. வீட்டின் உள்புறச் சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உடனே போங்க... NO EXCUSE... பருவமழையை எதிர்கொள்ள கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்த முதல்வர்...!
நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான ஃபேன், லைட் போன்றவற்றை மின்சாரம் வந்தவுடன் இயக்கக் கூடாது என தெரிவித்துள்ளது. மேலும், மின்கம்பங்கள், மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக் கிடக்கும் நீரில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மின் கம்பிகளில் கால்நடைகளை கட்டுவதோ துணிகளை உலர்த்துவதோ கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மின்தடை சம்பந்தமான புகார்களை 24 மணி நேரமும் செயல்படும் 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சுழற்றி அடிக்கும் மழை... புயலாக மாறுமா? வானிலை மையத்தின் மண்டல தலைவர் அமுதா முக்கிய தகவல்...!