இந்தியாவின் வானிலை அமைப்பில் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுவது தென்மேற்கு பருவ மழை. இது நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழையைத் தரும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. விவசாயம், நீர் வளம், பொருளாதாரம் ஆகியவை இந்தப் பருவ மழையைப் பெரிதும் சார்ந்துள்ளன. பொதுவாக, இந்திய வானிலைத் துறை வரையறுக்கும் அடிப்படையில் தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இதன் தொடக்கம் இந்தியாவின் தெற்கு முனையான கேரளாவில் இருந்து ஆரம்பமாகிறது.
தென்மேற்கு பருவ மழையின் தொடக்கத்தைப் பொறுத்தவரை, சராசரியாக ஜூன் 1-ஆம் தேதி கேரளாவில் மழை தொடங்கும் என்று கணிக்கப்படுகிறது. இது மிகவும் முக்கியமான தேதியாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளின் புள்ளிவிவரங்களின்படி, தெற்கு கேரளாவில் மே 30-ஆம் தேதியும், வடக்கு கேரளாவில் ஜூன் 1-ஆம் தேதியும் சராசரி தொடக்க தேதியாக இருக்கிறது. இந்தத் தேதிகள் வரலாற்று ரீதியாக மாறுபாடுகளைக் கொண்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவ மழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், தெற்கு வங்க கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் பருவமழை தொடங்க கூடும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தென்மேற்கு பருவமழை விரைவில் தொடக்கம்.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் மழை தொடரும்..!!
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று கனமழையும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மற்றும் புதுவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் 17ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது .
இதையும் படிங்க: பேய் மழை பொளக்கப்போகுது... இன்று இந்த 4 மாவட்ட மக்கள் உஷாரா இருங்க... வெளியானது எச்சரிக்கை...!