2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. அந்த வரிசையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற போட்டியில், ஆரம்பத்திலிருந்தே கடுமையான போட்டி நிலவியது. ஸ்னாட்ச் பிரிவில் முதல் முயற்சியில் சவாலை சந்தித்த ராஜா முத்துப்பாண்டி, அடுத்த முயற்சியில் 126 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கி தனது கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து அதிக எடையை முயன்றாலும் அது வெற்றியடையவில்லை.
பின்னர் நடைபெற்ற கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் அவர் சிறப்பான முயற்சியை வெளிப்படுத்தினார். தொடக்க முயற்சி வெற்றியளிக்காத நிலையிலும், அடுத்த முயற்சியில் 160 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கி மொத்தம் 286 கிலோ எடையைப் பதிவு செய்தார். இந்த செயல்திறனே அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தது.
இதையும் படிங்க: காவிரி விஷயத்தில் விஷப்பரீட்சை வேண்டாம்... கர்நாடகா போகாதீங்க... ஸ்டாலின் எச்சரிக்கை..!!

தங்கப்பதக்கம் வென்ற ராஜா முத்துப் பாண்டிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் என்று கூறினார்.
ராஜா முத்துப்பாண்டி அவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும் எனக்கு கூறியுள்ள முதல்வர் விஜய், அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள் என்றார்.
இதையும் படிங்க: பாமக நிறுவனர் ராமதாஸூக்கு 88-வது பிறந்தநாள் இன்று.. முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!!