இன்றைய காலகட்டத்தில் போதைப்பொருட்கள் என்பது வெறும் அச்சுறுத்தலாக மட்டுமல்ல, தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. போதைப் புழக்கத்தில், OG கஞ்சா என்பது உயர்தர, தூய்மையான அல்லது அசல் வகை கஞ்சாவைக் குறிக்கும் – இது வெளிநாட்டு செடிகளிலிருந்து தயாரிக்கப்பட்டு, அதிக THC (டெட்ராஹைட்ரோகனாபினால்) அளவைக் கொண்டிருக்கும்.
இந்தப் புழக்கத்தின் விளைவுகள் ஆபத்தானவை. உடல்நலம் ரீதியாக, OG கஞ்சா போன்ற உயர்தர வகைகள் THC அளவு அதிகமாக இருப்பதால், மூளையின் செயல்பாட்டை பாதிக்கின்றன. குறிப்பாக 17 வயதுக்கு முன் தொடங்கினால், நினைவாற்றல் குறைவு, மனநோய், மனச்சோர்வு போன்றவை ஏற்படும். இளம் வயதில் உட்கொள்ளல் மூளையின் வளர்ச்சியைத் தடுக்கிறது. சமூக ரீதியாக, இது குடும்பங்களை சீரழிக்கிறது.

பெற்றோர்களின் போதை பழக்கம் குழந்தைகளுக்கு மரபணு ரீதியாகவும் பரவுகிறது. பல்வேறு குற்றங்களுக்கும் வழி வகுக்கிறது. இந்த நிலையில் ராஜபாளையம் அருகே வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மது மற்றும் கஞ்சா போதை ஆசாமிகளை கைது செய்ய கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகே மது மற்றும் கஞ்சா போதையில் ஐந்து குடும்பத்தினரின் வீடுகளுக்குள் புகுந்து போதை ஆசாமிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் ஆண்களை அறிவாளால் வெட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கஞ்சா போதை ஆசாமிகளின் அத்துமீறல் தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சம்பந்தப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்… நீதிமன்ற உத்தரவை அடுத்து முடிவு…!
விசாரணை நடத்திவிட்டதாக கூறி போலீசார் அவர்களை விடுவித்த நிலையில் வீடு புகுந்து தங்களை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர். புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மறியல் போராட்டம் நடந்த இடத்தில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு ஆண்களை தரதரவென இழுத்துச் சென்று ராஜபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: கல்லூரி வளாகத்திலேயே நடந்த கொடூரம்… மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை…!