கரூர் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் எடப்பாடி பழனிச்சாமி, முக அரசின் அலட்சியம்தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்று கூறி வருகிறார். கள்ளக்குறிச்சிக்கு போகாத முதலமைச்சர் கரூருக்கு உடனடியாக விரைந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். திமுகவை குற்றம் சாட்டி விஜய்க்கு அவர் ஆதரவாக பேசுவதாகவும், தமிழக வெற்றி கழகத்தை கூட்டணிக்கு அழைப்பதற்காகவே பேசி வருகிறார் என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது.
விஜய்யிடம் கூட்டணி வைப்பதற்காக தான் அவருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்ற விமர்சனம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, யாரிடமும் கூட்டணி வைக்க தவம் இருக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு கிடையாது என்று தெரிவித்தார்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாகவும் கூறினார். அதிமுகவை நாடி கூட்டணி வைக்க பிற கட்சிகள் வரும் காலம் வந்து கொண்டிருப்பதாகவும், கூட்டணியை திறம்பட கையாளும் திறமை கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் அப்படிப்பட்ட தலைவர் தான் முக்கியம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவின் அலங்கார தேவதை EPS... ஆஹா ஓஹோ என புகழ்ந்த ராஜேந்திர பாலாஜி...!
ஆகவே சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் அப்பாவி உயிர்கள் பறிபோவதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் என்று தெரிவித்தார். அதேபோல் ஏடிஜிபி கூறிய காவல்துறையினரின் எண்ணிக்கையும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் கூறிய எண்ணிக்கையிலும் முரண்பாடு இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியது உண்மை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முகத்தை துடைத்தது ஒரு குத்தமா?... திமுகவை வெளுத்து வாங்கிய ராஜேந்திர பாலாஜி...!