• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆளுநர் - மாநில அரசு மோதலுக்கு முடிவு எப்போது? துணைவேந்தர்கள் நியமனம் குறித்து ராமதாஸ் கேள்வி..!

    ஆளுனருக்கும், அரசுக்கும் இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. பல்கலைக்கழகங்கள் முடங்கி விடக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Mon, 24 Mar 2025 12:50:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramadoss-asks-about-governor-and-the-state-government-c

    பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையால் துணைவேந்தர்கள் இல்லாமல் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; 30 மாதங்களாக புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை:  மதிப்பில்லாத பட்டங்களுடன் துயரப்படும் மாணவர்கள் -ஆளுனர், மாநில அரசு மோதலுக்கு முடிவு காண்பது எப்போது?

    CM MK Stalin

    தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு கடந்த 30 மாதங்களாக புதிய துணைவேந்தர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை.  இதேநிலை தொடர்ந்தால்  வரும் ஆகஸ்ட் மாதத்தில் 85% பல்கலைக்கழகங்களில்  துணைவேந்தர்கள் இல்லாத நிலை உருவாகி விடும். ஆளுனருக்கும், அரசுக்கும் இடையிலான மோதல் தான் இதற்குக் காரணம் எனும் நிலையில் அதற்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.

    இதையும் படிங்க: கடமை தவறிய தமிழக அரசு.. இதுவரை 81 பேர் பலி.. தேவை உடனடி தடை.. சூதாட்ட செயலிக்கு எதிராக ராமதாஸ் போர்க்கொடி..!

    CM MK Stalin

    தமிழ்நாட்டில்  சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,  திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம்  ஆகிய 8  பல்கலைக் கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 30 மாதங்களாகவும், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022 நவம்பர் மாதம் முதல் 29 மாதங்களாகவும் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன.

    CM MK Stalin

    தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வருகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வரும் மே 19&ஆம் தேதி நிறைவடைகிறது. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 17&ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    அதுவரை புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தால் உயர்கல்வித்துறையின் கீழ்  இயங்கும் 13 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள், அதாவது 85% பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை உருவாகிவிடும்.

    CM MK Stalin

    துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழகங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் நிலையான பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், நிதி அலுவலர்களும் இல்லாததால் அவை முடங்கிக் கிடக்கின்றன. பல்கலைக்கழகங்களின் கல்வி வளர்ச்சி  பாதிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் இல்லாமல் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை.  சில பல்கலைக்கழகங்களில்  பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டாலும் துணைவேந்தர்களின் கையெழுத்து இல்லாமல் வழங்கப்பட்டுள்ள  பட்டச் சான்றுகளுக்கு மதிப்பில்லை  என்பதால்  மாணவர்களின்  வேலைவாய்ப்புத் தகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

    CM MK Stalin

    பல்கலைக்கழங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்..... பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக  அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான மோதல் தான். ஆளுனருக்கும்,  அரசுக்கும் இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. பல்கலைக்கழகங்கள் முடங்கி விடக்கூடாது.  இந்த சிக்கலுக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும்.

    CM MK Stalin

    பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு, ஏற்கனவே ஆளுனருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் தொடர்பான வழக்குகளுடன் இணைத்து உச்சநீதிமன்றத்தில் வேகமாக விசாரிக்கப்பட்டாலும் கடந்த ஒரு மாதமாக அந்த வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இடைக்காலத் தீர்ப்பைப் பெறுவது அல்லது வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளின் மூலம் அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து  காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: தமிழக அரசு தூங்குவது போல் நடிக்கிறது.. சாதிவாரி கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி ராமதாஸ் விமர்சனம்..!

    மேலும் படிங்க
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்..

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு
    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    தமிழ்நாடு
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    என்ன படத்தை எடுத்திருக்க பா..!

    என்ன படத்தை எடுத்திருக்க பா..! 'டூரிஸ்ட் பேமிலி' டைரக்டரை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்..!

    சினிமா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு
    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    தமிழ்நாடு
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு
    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share