இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலை தங்கச்சி மடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் மீனவ பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீன் பிடிக்க சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுக்கும் நிறுத்தி விரட்டியடித்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு படகையும் அதிலிருந்த 7 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.விசாரணை பின் மீனவர்களை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
இந்த சம்பவம் ராமேஸ்வரம் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீனவர்களையும் படகுகளையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சி மடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் போராட்டத்தில் மீனவ பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் மீனவர்கள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் அராஜகம்.. ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை..!!
மேலும் மீனவ பெண்கள் கண்ணீர் மல்க தன் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றாலே இலங்கை கடற்படை சிறை பிடிப்பது வாடிக்கை நிகழ்வாக இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மத்திய அரசை விரைந்து நடவடிக்கை எடுத்து மீனவர்களையும் படகையும் விடுதலை செய்யும் வரை சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மாட்டோம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனமும் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வாகனமும் காத்திருக்கிறது.
தங்கச்சிமடத்தில் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், போராட்டம் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்.. சாலை மறியலில் குதித்த உறவினர்கள்..!!