ஒவ்வொரு மாதமும், குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட அளவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவை தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டவை. முதன்மை அட்டை உள்ள குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில், மண்ணெண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்தப் பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் குடும்பங்கள் மாதாந்திர செலவுகளை குறைக்க முடிகிறது. விநியோகம் e-POS இயந்திரங்கள் மூலம் துல்லியமாக பதிவு செய்யப்படுகிறது. இது திருட்டு மற்றும் சில்லறைத்தன்மைகளை தடுக்க உதவுகிறது. GPS அடிப்படையிலான டிராக்கிங் அமைப்பு மூலம் கோடவுன்களிலிருந்து கடைகளுக்கு போகும் பொருட்களின் இயக்கம் கண்காணிக்கப்படுகிறது.விநியோக நேரம் பொதுவாக மாதத்தின் 1 முதல் 20 வரை நடைபெறுகிறது.

இதனிடையே, நவம்பர் மாதத்திற்கான அரிசி ஒதுக்கீடு கிடங்குகளுக்கு அனுப்பி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது தீபாவளி விடுமுறை முடிந்ததும் நவம்பர் மாத உணவு பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இயந்திர கோளாறால் சில பகுதிகளில் பொருட்கள் வழங்க முடியாத நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூர் ஆறாத வடுக்கள்... தவெகவினர் தீபாவளி கொண்டாட வேண்டாம்... கட்சி தலைமை அறிவுறுத்தல்...!
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு தீபாவளி விடுமுறை முடிந்த பிறகும் ரேஷன் பொருட்களை பெறலாம் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் இருக்கும் மக்கள் தீபாவளி முடிந்ததும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு போனஸ்... தமிழக அரசு அதிரடி உத்தரவு...!