கோவை மாவட்டத்துக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. இதனால் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பருவமழைக் காலங்களில் கோவையில் சாலையோர தாழ்வான இடங்கள், ரயில்வே சுரங்கப் பாதைகளின் கீழ், மேம்பால கீழ் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் தற்போது கோவையில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும், தேங்கும்பட்சத்தில் விரைவாக நீரை வெளியேற்ற ஏதுவாக கூடுதல் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் மழைநீர் தேங்கும் இடங்களான மேம்பாலங்களின் கீழ் பகுதிகள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பருவமழைக் காலத்தையொட்டி, பொதுமக்கள் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மாநகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்டலம் வாரியாக தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர கட்டுப்பாட்டு மைய எண் 0422-2302323, வாட்ஸ் அப் எண் : 81900-00200, வடக்கு மண்டலம் - 89259-75980, மேற்கு மண்டலம் - 89259-75981, மத்திய மண்டலம் - 89259-759822, தெற்கு மண்டலம் -90430-66114, கிழக்கு மண்டலம் - 89258-40945 ஆகிய தொடர்பு எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளிலும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வால்பாறை நகராட்சி 04253-222394, பொள்ளாச்சி - 04259-220999, மேட்டுப்பாளையம் 04254-222151, மதுக்கரை - 0422-2511815, கூடலூர் - 0422-2692402, கருமத்தம்பட்டி - 0421-2333070, காரமடை - 04254-272315 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டத்தில் உள்ள 11 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ரெட் அலர்ட் எதிரொலி... சவாரி, தொட்டப்பெட்டா சிகரம், பைன் பாரஸ்ட் செல்ல தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!
இதையும் படிங்க: கியூஆர் கோட் மூலம் திரள் நிதி வசூலிப்பு.. நாம் தமிழர் கட்சியினர் புகைப்படம் வைரல்!!