• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 07 Aug 2026 15:13:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Register FIR on Overcharging at TASMAC": Madras High Court Directs Police.

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பான வழக்கைக் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "நுகர்வோர்கள் கூடுதல் தொகையைக் கொடுப்பதால்தான் கடைப் பணியாளர்களும் கேட்கின்றனர்" என்ற சுவாரஸ்யமான கருத்தைப் பதிவு செய்துள்ளதுடன், இது தொடர்பான புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    Register FIR

    டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் தொகை வசூலித்தால், அதுகுறித்துச் சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையத்தில் நுகர்வோர் உடனடியாகப் புகார் அளிக்கலாம். அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது காவல் துறை தாமதிக்காமல் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் இனி கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    விசாரணையின் போது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில், "விற்கப்படும் மதுபானங்களுக்குக் கட்டாயம் ரசீது (Bill) வழங்க வேண்டும் என அனைத்துக் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிபதி, "மாநில அரசுக்குப் பெருமளவில் வருவாயை ஈட்டித் தரும் மதுபானக் கடைகளில் ரசீது வழங்குவதில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு என்ன சிக்கல் உள்ளது?" என கேள்வி எழுப்பினார்.

    நுகர்வோர் கூட்டம் அதிகமாகக் காணப்படும் டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காகக் காவலர்களைப் பணியமர்த்துவது குறித்துத் தமிழ்நாடு உள்துறை பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்துப் பேசிய நீதிபதி, "நுகர்வோர்கள் கூடுதல் தொகையை எதிர்ப்பின்றிப் பணியாளர்களுக்குக் கொடுப்பதால்தான், அவர்களும் துணிச்சலாகக் கேட்கின்றனர்" என்ற கருத்தையும் விசாரணையின் போது வெளிப்படுத்தினார்.

    இறுதியாக, இந்த வழக்கில் மனுதாரர் தேவராஜன் அளித்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விரிவாக விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டம் ஆபத்தானது! அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    மேலும் படிங்க
    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    தமிழ்நாடு
    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share