வடகிழக்கு பருவமழை, இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களையும், இலங்கை, மாலத்தீவுகள் போன்ற அருகிலுள்ள பகுதிகளையும் ஒருங்கிணைத்த முக்கியமான பருவநிலைக் காலம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழை மாநிலத்தின் ஆண்டு மழையளவில் சுமார் 48% முதல் 50% வரை பங்களிக்கிறது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற கடலோர மாவட்டங்கள் இந்த மழையால் அதிகம் பயனடைகின்றன. இருப்பினும், இந்த மழை சில நேரங்களில் புயல்கள் மற்றும் வெள்ளப் பெருக்குகளை ஏற்படுத்தி பெரும் சேதத்தையும் உண்டாக்குகிறது.

தமிழகத்தில் வடகிழக்க பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருந்து விலகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இயல்புக்கு அதிகமாக வடகிழக்க பருவ மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 19ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் இந்த ஆண்டு வடகிழக்க பருவமழையின் போது இயல்பை விட மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விடிய, விடிய கொட்டிய கனமழை... வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்... வெள்ளக்காடான தூத்துக்குடி...!
நடப்பாண்டுக்கான வடகிழக்கு பருவ மழை தொடர்பான அறிவிப்பில் தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமடை காலத்தில் தமிழ்நாட்டில் 58.9 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில் இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: #BREAKING கனமழை எதிரொலி... இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...!