பணி நிரந்தரம், தனியார் மையமாக்குதலுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற சமூக முடிவு ஏற்படவில்லை. பொதுமக்களுக்கு ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை அடுத்து தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது. கலைந்து செல்ல மறுத்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். பல மணி நேரம் அடைத்து வைத்திருந்து பின்பு விடுவிக்கப்பட்டனர்.

பொதுமக்களுக்கு இடையூறு எனக் கூறி பொதுநல வழக்கு தேன்மொழி என்பவர் பெயரில் தொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்தத் தேன்மொழி யார் என்று அதிமுக அம்பலப்படுத்தி உள்ளது. தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்த தேன்மொழி திமுக சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகி என்று அதிமுக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது! ரிப்பன் மாளிகையில் பரபரப்பு.. போலீசார் குவிப்பு..!
இவர் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டிருக்கும் தனம் சாரிடபிள் டிரஸ்ட் யாருடையது தெரியுமா கேள்வி எழுப்பி உள்ள அதிமுக, பணி நிரந்தர வாக்குறுதியை நாங்கள் கொடுக்கவே இல்லை என பச்சை பொய் சொன்ன அமைச்சர் சேகர்பாபு உடையது என்று கூறியுள்ளது.

யாருக்கும் தொந்தரவு செய்யாமல், அமைதியாக போராடி வந்த எளிய மக்களின் மீது கரிசனம் கொள்ளாமல் வெறுப்பை உமிழ்ந்து, காட்டில் இரையை வேட்டையாடும் மனோபாவத்தோடு , நரி தந்திரம் செய்து, அவர்களை நடுஇரவில் காவல்துறையை வைத்து அடித்து திமுக வெளியேற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்களை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு, அவர்களை இடையூறாக கருதிய திமுக ஆட்சியை மக்கள் குப்பையில் வீசத் தான் போகிறார்கள் என்றும் அதை முதலமைச்சர் ஸ்டாலின் பார்க்கத் தான் போகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாங்க என்ன கஞ்சா, சாராயம் விக்குறவங்களா? கொளுத்தினு சாவோம்! தூய்மை பணியாளர்கள் ஆவேசம்..!