சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக செங்குத்தாக பிளவுபட்டு இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் எடப்பாடி பழனிச்சாமி கை கோர்க்க நினைத்தார் என்ற கடும் குற்றச்சாட்டை அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி அதிமுக இருக்காது என C.V. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
திமுகவுடன் இணைந்த ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி முயன்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பரம எதிரியான திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி வற்புறுத்திய போது அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மட்டும் இல்லாமல் பல்வேறு தேர்தலில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் தலைமையிலான விஜய் அரசுக்கு ஆதரவு கொடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் கூறினார். இந்த நிலையில், திமுக-அதிமுக கூட்டணி பேச்சு நடந்ததாக கூறப்பட்டதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி விளக்கம் கொடுத்துள்ளார். திமுக ஆக்கப்பூர்வமாக எதிர்க்கட்சிகளாக செயல்படுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக கூறிவிட்டார் என்றும் தெரிவித்தார். திமுக அதிமுக என்ற கட்சிகளுக்கு எதிராக தான் விஜய் கட்சி தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் நாகரீகம்..! நேரில் வந்த முதல்வர் விஜய்..! திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!
தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக திமுக மீது பழி போட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். வெற்றி பெற்ற போது ஆடவும் இல்லை., தோல்வி கண்டு நாங்கள் துவண்டு போனதும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். திமுகவுடன் ஈபிஎஸ் கூட்டணி என பேசி சண்முகம் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார். ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற போது திமுக உடைந்து போகவில்லை என்றும் கூறியுள்ளார். திமுக 220 தொகுதிகளில் வெற்றி பெற்ற சாதனையை உடைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இத்தனை MLA-க்கள் மீது கிரிமினல் வழக்குகளா..!! முதலிடத்தில் CM விஜய்யின் தவெக கட்சி..!!