பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன. இருப்பினும் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தூய்மை பணிகளை தனியாரிடம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் கலைஞர் கருணாநிதி நினைவிடம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். 2026 புத்தாண்டில் வாழ்வதா, சாவதா என பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைஞர் நினைவிடத்தில் அமர்ந்து கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு தொடர்ந்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: பஸ்ல இருந்து குதிச்சிடுவோம்… குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள்… பரபரப்பு…!
தூய்மை பணியாளர்களை கட்டுப்படுத்தும் விதமாக பேரிகார்டுகளை அமைத்து ஏராளமான போலீசார் நினைவிடத்தின் உள்ளேயும் விலையையும் பாதுகாப்ப பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார்.
இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அரசு செவி சாய்க்கவில்லை என்றால் புத்தாண்டு அன்று தீக்குளிப்போம் என்றும் தொடர்ந்து தங்கள் போராட்டம் நீளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். திருட்டு ஓட்டு வாங்கினீர்களே என்றும் ஓட்டு வாங்குவதற்கு மட்டும் எங்களை தேடி வந்தீர்களே எனவும் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இனிமேல் பணி நிரந்தரமே கிடையாது என்று பகிரங்கமாக பேசுங்கள் பார்க்கலாம் என்றும் தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு ஆட்சி அமைந்ததும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போவது என்ன செயல் என்ற கேள்வி எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இதையும் படிங்க: குட் நியூஸ்... தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை... சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்...!