அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் செங்கோட்டையின் ஈடுபட்டு வருகிறார். திமுகவை வீழ்த்தி ஆட்சி அறிவியலையில் அமர முடியும் என்பதில் தீர்க்கமாக உள்ளனர். இன்று முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் என்று மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலின், எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவதற்காக சசிகலா பசும்பொன்னுக்கு வருகை தந்தார். அப்போது ஓ பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் சசிகலாவை சந்தித்து பேசினர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களுடன் பிரிந்து சென்றவர்களுடன் செங்கோட்டையன் இது போன்ற சந்திப்பு நிகழ்த்துவது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய் நகர்த்துவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சிக்கும் ஆதரவளித்து வருகிறார் சசிகலா. இதனிடையே, மதுரையில் சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று சூசகமாக பேசினார். அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என்றும் சசிகலா சூளுரைத்தார்.
இதையும் படிங்க: சசிகலாவுடன் OPS, செங்கோட்டையன் சந்திப்பு... அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பெரும் எதிர்பார்ப்பு..!
கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை நான் ஏற்கெனவே தொடங்கிவிட்டேன் என்று கூறிய அவர், அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை என்றும் என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும் என்றும் சசிகலா கூறினார். மேலும், அதிமுகவை பொறுத்தவரை இது இரண்டாவது முறை நடக்கும் பிரச்சனை, என்றும் மீண்டும் அதிமுக இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் ஒரு துரோகி... அவங்க மூணு பேரும் திமுகவின் B டீம்... இபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்...!