திருக்கோவிலூர் அருகே பள்ளிக்குச் சென்ற ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இருவரை காணவில்லை ஆசிரியர்கள் முறையாக பதில் கூறாததால் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் கதறல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த எடையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் லோகேஷ், யுவராஜ் ஆகிய இருவரும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்,
வழக்கம்போல இன்று மதியம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு தட்டு கழுவி வைத்துவிட்டு சாலை பக்கம் சென்ற மாணவர்கள் இதுவரை பள்ளிக்கு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது பள்ளிக்கு வந்தார்கள் எங்கு சென்றார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை என்று சாதாரணமாக பதில் கூறியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களை கண்டுபிடித்து தருமாறு ஆசிரியர்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஷாக்...! திடீரென உடைந்த ஏரி... வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2000 உயிர்கள்...!
மாணவர்களை இழந்த பெற்றோர்கள் கதறி அழுத வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பXள்ளிக்கு சென்ற இரு மாணவர்கள் காணாததால் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 4வது T20 கிரிக்கெட் போட்டி... இந்திய அணி அபார வெற்றி... சுருண்டது ஆஸ்திரேலியா...!