• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திரை கவர்ச்சி மங்கும், இன கவர்ச்சி பொங்கும்: தவெக, திமுக, அதிமுகவுக்கு எதிராக சீமான் ஆவேசம்!

    பக்கா மாஸ் என்று சொல்லக்கூடிய நீங்கள் ஏன் வாக்குக்கு 6000 ரூபாய் கொடுக்கிறீர்கள் என தாராபுரத்தில் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 04 Oct 2026 18:44:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Screen Glamour Will Fade": Seeman Appeals to Elect NTK Candidate Karthika in Dharapuram Bypoll.

    வாக்கு என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய ஆயுதம் என்றும், அநீதிக்கும் அதிகாரத் திமிருக்கும் எதிராக மக்கள் வாக்களிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும், தங்களை பக்கா மாஸ் என்று சொல்லிக்கொள்ளும் தவெகவினர் இடைத்தேர்தலில் வாக்குக்கு ரூ.6,000 பணம் கொடுப்பது ஏன் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்துப் பிரச்சார நிறைவு நாளில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சீமான் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    கூட்டத்தில் பேசிய சீமான், பதவி ஆசைக்காகத் தாங்கள் பெற்ற பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டுச் சென்றவர்களுக்கு மக்கள் எக்காலத்திலும் மீண்டும் அந்தப் பதவியைத் தரக்கூடாது என்று எச்சரித்தார். எங்கு போய் நின்றாலும் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று வாக்காளர்களை மிகக் கேவலமாக எடைபோடுகிறார்கள் என்று சாடிய அவர், திமுக, அதிமுக, தவெக எனப் பிற கட்சிகளுக்குப் பல நூறு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 16 ஆண்டுகளாக வீதி வீதியாக மக்களுக்காகக் களத்தில் நின்று போராடும் தங்களுக்கு ஒரேயொரு முறை வாய்ப்பளித்துச் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் உண்மையான மாற்று அரசியலை மக்கள் உணர்வார்கள் என்றார். தகுதி இல்லாதவரை நிறுத்த உங்கள் மகன் ஒன்றும் தற்குறி அல்ல என்றும், களத்தில் நிற்கக்கூடிய கார்த்திகா மிகுந்த தகுதி வாய்ந்த வேட்பாளர் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    Dharapuram Bypoll

    விவசாயிகளின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய அவர், உலகத்தில் உள்ள அனைவரும் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குத் தாங்களே விலையை நிர்ணயிக்கும் சூழலில், விவசாயியால் மட்டும் தான் விளைவித்த பொருளுக்கு உரிய விலையை நிர்ணயிக்க முடியாமல் விஷம் குடித்து மாளும் நிலை தொடர்வதாக வேதனை தெரிவித்தார். செல்போனுக்கும் காருக்கும் ரூ.100 கோடியில் திட்டம் போடும் ஆட்சியாளர்களிடம், நீருக்கும் சோற்றுக்கும் எவ்வித தொலைநோக்குத் திட்டமும் இல்லை என்றும், விவசாயத்தை முதன்மைப்படுத்தும் கூட்டுப்பண்ணைத் திட்டத்தை நாம் தமிழர் கட்சி மட்டுமே கையில் வைத்துள்ளது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் ரோடு ஷோ பாதையில் போராட்டம்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உட்பட நிர்வாகிகள் கைது!

    தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரங்களைக் கடுமையாக விமர்சித்த சீமான், திரைக்கவர்ச்சி என்பது விரைவில் மங்கிவிடும் என்றும், இனக்கவர்ச்சி மட்டுமே எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்றும் முழங்கினார். விஜய்யைப் பார்க்கக் கூட்டம் வரலாம், ஆனால் தனது முகத்தைப் பார்க்க மக்கள் வரவில்லை, தான் பேசும் புரட்சிகரக் கருத்துகளைக் கேட்கவே மக்கள் கூடுகிறார்கள் என்றும், காசு கொடுக்காமல் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டும் ஒரே இயக்கம் நாம் தமிழர் கட்சி மட்டுமே என்றும் தெரிவித்தார். ஆறு மாத ஆட்சியில் மிகப்பெரிய சாதனை படைத்துவிட்டதாகக் கூறிக்கொள்ளும் தவெகவினர், இடைத்தேர்தலில் எதற்காக வாக்காளர்களுக்கு ரூ.6,000 வரை பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

    மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் தவெக வேட்பாளர்கள் தங்களது சொந்தப் பதவி ஆசைக்காக விலகி இந்த இடைத்தேர்தலை மக்கள் மீது திணித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் பணத்தைத் தொட மாட்டேன் என்று கூறிவிட்டு ஊழல்வாதிகளைச் சேர்த்துக் கொண்டு கும்மியடிப்பதே தவெகவின் வேலை என்று சாடினார். தங்களுக்கு ஆட்சி மாற்றம் நோக்கம் அல்ல என்றும், ஆள் மாறினாலும் ஆட்சி முறை மாறாது என்பதால், பழைய கட்டடத்திற்கு வெள்ளை அடிக்கும் சீர்திருத்தவாதிகளாக இல்லாமல், அழுகிப்போன பழைய அமைப்பை அடியோடு தகர்த்துவிட்டுப் புதிய புரட்சிகர ஆட்சி முறையை உருவாக்குவதே தங்களது இலக்கு என்றும் பிரகடனம் செய்தார்.

    இறுதியாக, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையையும் கொடியையும் திருடிக் கொண்டவர்கள் எம்எல்ஏ-க்களைத் திருட மாட்டார்களா என்று கேள்வி எழுப்பிய சீமான், திராவிடக் கட்சிகளுடனோ மற்றவர்களுடனோ ஒருபோதும் கூட்டணி இல்லை என்றும், 2029 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்தே களம் காண்போம் என்றும் தெரிவித்தார். மின் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்திவிட்டுத் தேர்தல் நேரத்தில் இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுபவர்களுக்கு மக்கள் தங்களது விவசாயி சின்னத்திற்கு வாக்களித்துச் சாட்டையடி கொடுக்க வேண்டும் என்று சீமான் அறைகூவல் விடுத்தார்.

    இதையும் படிங்க: ஓட்டுக்கு ரூ.6000...! தாராபுரத்தில் பணப்பட்டுவாடா ஜோர்..! நாதக வேட்பாளர் கார்த்திகா புகார்..!!

    மேலும் படிங்க
    நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்தார் சிவகார்த்திகேயன்! போரூரில் ரசிகர்கள் உற்சாகம்!

    நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்தார் சிவகார்த்திகேயன்! போரூரில் ரசிகர்கள் உற்சாகம்!

    தமிழ்நாடு
    ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: தாராபுரம், மதுராந்தகத்தில் அக். 6-ல் வாக்குப்பதிவு!

    ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: தாராபுரம், மதுராந்தகத்தில் அக். 6-ல் வாக்குப்பதிவு!

    தமிழ்நாடு
    நான் சினிமா நட்சத்திரமோ, வாரிசோ அல்ல; உங்களில் ஒருவன்! தவெகவை சாடிய எடப்பாடி பழனிசாமி!

    நான் சினிமா நட்சத்திரமோ, வாரிசோ அல்ல; உங்களில் ஒருவன்! தவெகவை சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    CM சார்... நாடு சிரிக்கும் 4 மாதங்கள்! முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    CM சார்... நாடு சிரிக்கும் 4 மாதங்கள்! முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுங்கள்! வாக்காளர்களுக்கு முதல்வர் விஜய் வேண்டுகோள்!

    தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுங்கள்! வாக்காளர்களுக்கு முதல்வர் விஜய் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    குரோம்பேட்டை பெரிய ஏரியில் சோகம்: 2 சிறுமிகள் உள்பட 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

    குரோம்பேட்டை பெரிய ஏரியில் சோகம்: 2 சிறுமிகள் உள்பட 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share