அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் இருவரும் இரு துருவங்களாக மாறிவிட்டனர். கட்சியை த் தூண்டாடி தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களையும் பொதுக்குழு கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி மற்றும் எம்எல்ஏ அருள் மீது அன்புமணி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்.

சமீபத்தில் பாமக எம்எல்ஏ அருள் அளித்த பேட்டி ஒன்றில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தான் 45 ஆண்டு காலமாக தொடர்ந்து நியமனங்களை வழங்கி வருகிறார் என கூறினார். கட்சியின் தலைவர் முதல் கிளைச் செயலாளர் வரை பொறுப்பாளர்களை நியமிக்க கூடிய அதிகாரம் படைத்த தலைவர் ராமதாஸ் தான் என்றும் கூறினார்.

அன்புமணி தலைவராக இருக்கும் காலகட்டத்திலும் அதுதான் நடைமுறை. ராமதாஸிடம் இருப்பது விசுவாசிகள் கூட்டம்., இந்த விசுவாசிகள் கூட்டம் அப்படியே அன்புமணியின் பக்கம் நிற்கும்.,ஆனால் அவர், பதவிக்காக பெற்ற அப்பாவையே விட்டு போகிறார் என்று தெரிவித்திருந்தார். கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் ராமதாஸ் தான் நிர்வாகிகளை நியமிப்பார் என்பது குறித்து அருள் பேசி இருந்தார்.

இந்த நிலையில், 12 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக எம்எல்ஏவுக்கு அன்புமணி ராமதாஸ் நேற்று கெடு விதித்து இருந்தார். இந்த நிலையில் இன்று அருளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்கி உள்ளார். கட்சி தலைமை குறித்து அவதூறு பரப்பி வருவதால் அருள்மிகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாமக அருளுடன் கட்சியினர் எவரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக பேசிய அருள் எம்எல்ஏ, தான் என்ன தவறு செய்து விட்டேன் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். தந்தையும் மகனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததால் கட்சியில் இருந்து தூக்கி உள்ளார்களா என்று கேள்வி எழுப்பிய அவர், என்றும் எங்கள் சின்னவர் அவர்தான் என்றும் ராமதாஸிற்கு பிறகு அன்புமணி தான் எனவும் தெரிவித்தார். ராமதாசை விட்டு வந்து விட்டால் நான் நல்லவனாகி விடுவேனா என்றும் ராமதாஸ் கூறினால் அன்புமணியை சந்திப்பேன் எனவும் அருள் தெரிவித்தார்.