சத்தீஸ்கரில் பழங்குடியின மக்களுக்குச் சேவை செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரிகள் மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவரையும் பொய் வழக்கு புனைந்து அம்மாநில பாஜக அரசு கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.
அருட்சகோதரிகள் இருவரும் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரை சேர்ந்த மூன்று இளம் பெண்களை செவிலியர் படிக்க வைக்க தேவையான உதவிகளை செய்த நிலையில், அவர்களை ஆக்ரா அழைத்துச் சென்று மதமாற்றம் செய்ய திட்டமிட்டிருந்ததாக, இந்துத்துவ மதவாத அமைப்பான பஜ்ரங்தள் உள்நோக்கத்துடன் அளித்த பொய்ப் புகாரின் அடிப்படையில், எவ்வித முறையான விசாரணையும் மேற்கொள்ளாமல் சத்தீஸ்கர் மாநில அரசு அருட்சகோதரிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கொடுங்கோன்மை என்றார்.
தன்னைப்போல அயலானையும் நேசி என்ற இறைமகன் ஏசு பிரானின் அருள்மொழிக்கேற்ப சத்தீஸ்கர் மாநில பழங்குடி மக்களுக்குக் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை புரியும் பெரும்பணியில் ஈடுபட்டிருந்த அருட்சகோதரிகளின் தொண்டுள்ளம் மிகுந்த போற்றுதலுக்குரியது என்றும் ‘எளிய மக்களுக்குச் செய்யும் சேவையே, இறைவனுக்குச் செய்யும் சேவை’ என்ற உன்னத இலட்சியத்திற்குத் தம் வாழ்வையே அர்ப்பணித்த அருட்சகோதரிகளின் பணியை அங்கீகரித்து ஊக்கமளித்திருக்க வேண்டிய சத்தீஸ்கர் மாநில அரசு அதனை செய்யத் தவறியதுடன், மதவெறி மனப்பான்மையுடன் அளிக்கப்பட்ட பொய்ப்புகாரை ஏற்று கைது செய்து அவர்களின் மக்கட்பணியை முடக்க நினைப்பது பாசிச கொடுமைகளின் உச்சம் என்று கூறினார்.
இதையும் படிங்க: நிரந்தர பணியாக மாற்றங்கள்! ஊர்க்காவல் படையினருக்காக குரல் கொடுத்த சீமான்...

பிடித்த கடவுளை வழிபடுவதும், விரும்பிய மதத்தை பின்பற்றுவதும் இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை என சீமான் கூறினார். இசுலாமியர், கிறித்துவப் பெருமக்களை கண்டு பாஜக பயப்படுவது ஏன்? இத்தனை பதற்றம் கொள்வதுதான் ஏன்? அவ்வளவு பலகீனமாக உள்ளதா உங்கள் மதம்? மக்களுக்காக மதமா? அல்லது மதத்திற்காக மக்களா? என கேள்வி எழுப்பினார்.
மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்துப் பிளந்து, அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை அடைந்துள்ள பாஜக அரசு, மதவெறிகொண்டு, மற்ற மதங்களின் சுதந்திரத்தைப் பறிக்க நினைப்பதும், மக்கட் பணியைத் தடுக்க முனைவதும் இந்த நாட்டினை பேரழிவினை நோக்கி இட்டுச் செல்லவே வழிவகுக்கும் என்றும்
அருட்சகோதரிகள் மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவரையும் அம்மாநில அரசு உடனடியாக விடுதலை செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: காதலை கொன்னு புதச்சிடாதீங்க! ஆணவ படுகொலையை சுட்டிக்காட்டி சீமான் ஆதங்கம்..!