தனது 51வது பிறந்தநாளை விஜய் ஒன்று கொண்டாடுகிறார். “தளபதி” என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவராகவும் பயணித்து வருகிறார். விஜய் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் சமூக நல நிகழ்வுகள், ரத்த தான முகாம்கள், மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து மகிழ்கின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரை மற்றும் அரசியல் பயணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாழ்த்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். திரைத் துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன் என்று கூறி தனது வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளார்.
இதையும் படிங்க: ஐயா சீக்கிரமே குணமாகி வாங்க..! ஜி.கே மணியை நேரில் சென்று நலம் விசாரித்த சீமான்..!

அவரது வாழ்த்துச் செய்தியில், தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள். என்று சீமான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!