நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது.
பணகுடி அருகே .மகேந்திரகிரி மலையில் மாடு மேய்வதைத் தடை செய்த வனத்துறை முடிவை எதிர்த்து, அந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு பாரம்பரிய உரிமை வழங்க வேண்டும் என நாம்தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, “பாரம்பரிய உரிமையை மீட்டெடுப்போம்” என்ற கோஷத்துடன் போராட்டம் நடைபெறும் என கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வன உரிமை சட்டத்தின்படி பணகுடி பகுதியில் வன கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு அந்த மேய்ச்சல் நிலத்திற்கான வரைபட அறிவிப்பு சிறப்பு விழா மற்றும் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் ஆகியவை நடத்துவதாக இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: " விரைவில் அவர்கள் தலை துண்டிக்கப்படும்" - கடலம்மா மாநாட்டில் சீமான் ஆவேசம்...!
இந்த நிகழ்வுகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை இணைந்து மகேந்திரகிரி மலையில் ஏறி மாடு மேய்க்கக்கூடிய போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
மேலும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காக, தமிழ்நாடு சமூக மேய்ச்சல் சமூக கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 7 பேரை நள்ளிரவே கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.
மேலும் மாவட்டத்தின் ஆறு இடங்களில் மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பட்டிகளுக்கும் மாவட்ட காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதேபோல காவல்துறை போராட்டக் களத்திற்கு வரக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் சீமானுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். தற்போது அந்த நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது என அவர்களுக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேய்ப்பதற்காக வரவழைக்கப்பட்ட மாடுகள் பட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: பட்டப் பகலில் படுகொலை... எப்படி தான் துணிச்சல் வருது? கொந்தளித்த சீமான்...!