உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கின் மேல்முறையீட்டில் திமுக அரசு காட்டும் மெத்தனப்போக்கு பெரும் ஏமாற்றமளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சமூக நீதி அரசென மூச்சுக்கு முந்நூறு தடவை தற்பெருமை கொள்ளும் திமுக அரசு, ஆணவப்படுகொலை வழக்கில் இயற்கையாகக் கிடைக்க வேண்டிய நீதியையே பெற்றுத் தராது இழுத்தடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறினார்.
ஒருவருக்கொருவர் விரும்பி, மனமொத்து திருமணம் செய்து கொள்பவர்களை சாதியின் பெயரால் வெட்டி வீழ்த்தும் சாதிய ஆணவப்படுகொலைகள், நவீன அறிவியல் யுகமான தற்காலச் சூழலிலும் நடந்தேறி வருவது ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமான தலைகுனிவு என்று தெரிவித்தார். சாதியின் பெயரால் சொந்த இனத்துக்குள் நடக்கும் வன்முறை வெறியாட்டங்களும், பச்சைப்படுகொலைகளும் சகித்துக் கொள்ளவே இயலாத பெருங்கொடுமை என்றும் மக்கள் சாதியின் பெயரால் பிளந்து பிரிந்து நிற்பதும், தன்னினப்பகைக்கு ஆட்பட்டு வீழ்வதும் வரலாற்றுப் பெருந்துயரம் என தெரிவித்தார்.

சாதிய ஆணவப் படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடி வரும் கௌசல்யா ஆதங்கமும், வருத்தமும் மிக நியாயமானது என்றும் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு, ஐந்தாண்டுகளாகியும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதிருப்பதும், ஆளும் திமுக அரசு எவ்வித ஈடுபாட்டையும் வழக்கில் காட்டாததும் தற்செயலானதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விவசாயத்தை பாழாக்கும் விதை சட்ட வரைவு... பேராபத்து..! சீமான் கடும் எச்சரிக்கை...!
திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களின் ஊழல் வழக்குகளுக்கும், திமுக ஆட்சியை விமர்சனம் செய்ததற்காகக் கைதுசெய்யப்பட்டவர்களின் வழக்கில் பிணைக்கு எதிராகவும் பல இலட்சங்களைக் கொட்டியிறைத்து, மிக மூத்த வழக்கறிஞர்களைக் களமிறக்கும் திமுக அரசு, சாதிய வாக்கரசியலுக்காக சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் இயல்பான நடைமுறைகளையே பின்பற்ற மறுத்து, தாமதம் செய்வது நம்பிக்கைத்துரோகம் இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பெயரிலேயே காந்தம்... திரை பேராளுமை... ரஜினிகாந்துக்கு சீமான் வாழ்த்து...!