நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறார். கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவை உறுதி செய்துள்ளது. இதற்காக, பிப்ரவரி 21 அன்று திருச்சி அருகே ஆலம்பட்டிப்புதூரில் நடைபெற்ற 'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற மாநில மாநாட்டில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்தார்.
இதில் 117 ஆண்கள், 117 பெண்கள் என சம அளவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சீமான் தானே சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா வீரப்பன் போட்டியிடுகிறார்.

234 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து சீமான் பிரச்சாரம் நடத்தி வருகிறார். திருத்தணியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய சீமான் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நாம் தமிழர் கட்சியை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். திமுக மற்றும் அதிமுக கட்சிகளை விமர்சித்து பேசும் சீமான், நாம் தமிழர் கட்சியின் வாக்குறுதிகளை எடுத்துரைத்து வருகிறார்.
இதையும் படிங்க: பெற்றோர்களை பராமரிக்காத மகன்களுக்கு ரேசன், கேஸ், மின் இணைப்பு ரத்து... ஒரே போடாய் போட்ட சீமான்...!
இந்த நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணியை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, காவிரி பிரச்சனை குறித்து வழக்கு தொடர்ந்த கருணாநிதிக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுத்தது என சீமான் தெரிவித்தார். ஆட்சியை கலைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வழக்கை திரும்ப பெற்றவர் கருணாநிதி எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஒன்றரை கோடி வட இந்தியர்களுக்கு ஓட்டுரிமை... ஒட்டுமொத்த தமிழகமே ஷாக்... தேர்தல் களத்தை தெறிக்கவிட்ட சீமான்...!