திருச்சியில் இன்று நாம் தமிழர் கட்சி நடத்தவிருக்கும் மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாடு "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு" என்ற பெயரில் நடைபெறுகிறது. இது அடிப்படை மாற்றம், அமைப்பு ரீதியான மாற்றம், அரசியல் மாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட எளிய மக்களின் புரட்சிகரமான திரட்டலாக பார்க்கப்படுகிறது. மாற்றம் என்பது வெறும் சொல்லாக இல்லாமல், உண்மையான செயலாக மாற வேண்டும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
திருச்சி மாவட்டத்தில் ஆலம்பட்டிபுதூர் பகுதியில் மாநாடு நடைபெற உள்ளது. திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த திடல் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு இலட்சம் இருக்கைகள் வரை தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டின் மிக முக்கிய அம்சம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதி வேட்பாளர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளதுதான்.

அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் மேடையில் அறிவிக்கப்பட உள்ளனர். இது தமிழக அரசியலில் புதிய வரலாற்றை எழுதும் திருப்புமுனையாக இருக்கும் என்று கட்சியினர் நம்புகின்றனர். ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றன. பூமிபூஜை, கால்கோள் நிகழ்வுகள் நடந்து முடிந்தன.
இதையும் படிங்க: டைம் பாஸுக்கு கட்சி நடத்துறாரு சீமான்...! அதெல்லாம் கண்டுக்காதீங்க... தவெக நிர்மல் குமார் தாக்கு..!!
கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள், பாசறை உறுப்பினர்கள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றி வந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களையும் சீமான் மேடையில் அறிமுகம் செய்து வைக்க இருப்பதாகவும் சீமான் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது குறித்தும் இன்று அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் தமிழர் கட்சி நடத்தும் இந்த மாநாடு மிகுந்த உற்சாகத்தையும், வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: நான் தான் மூத்தவன்... விஜய் என் டயலாக்கை பேசக்கூடாது...!! சீமான் தடாலடி..!!