நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறார். கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவை உறுதி செய்துள்ளது. இதற்காக, பிப்ரவரி 21 அன்று திருச்சி அருகே ஆலம்பட்டிப்புதூரில் நடைபெற்ற 'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற மாநில மாநாட்டில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்தார்.
இதில் 117 ஆண்கள், 117 பெண்கள் என சம அளவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சீமான் தானே சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு கட்சியின் தேர்தல் பணிகளுக்கு பச்சைக்கொடி காட்டியதாக கருதப்படுகிறது.இந்த வேட்பாளர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், முனைவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது, தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் வகையில், வரும் மார்ச் 23 முதல் திருத்தணி தொகுதியில் இருந்து சீமான் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இது 234 தொகுதிகளுக்கும் விரிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "3 மரம் நட்டு.. 1 மரம் வெட்டு"..! மண் முதல் மக்கள் வரை... சீமான் சொல்லும் புதிய சட்டம்..!!
திருத்தணியை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்வைத்து, தனித்த போட்டியின் வலிமையை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த பிரச்சாரப் பயணம் அமையவுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக சீமான் வாக்கு சேகரிக்க உள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து சீமான் வாக்கு சேகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!