மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமனை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில், முந்தைய தேர்தலில் போட்டியிட்ட பொறியாளர் கோ. ஜானகிராமன் மீண்டும் கட்சி சார்பில் களம் காண்கிறார்.
அதிமுகவில் இருந்து பதவி விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேலின் ராஜினாமா காரணமாக இந்தத் தொகுதி காலியானது. இதையடுத்து தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ளது.சீமான் இன்று சனிக்கிழமை புழுதிவாக்கம் கூட்டுச்சாலையில் வாகனப் பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து எல்.எண்டத்தூர் சந்தைப் பகுதியிலும் வாக்கு சேகரித்தார்.

மாலையில் மதுராந்தகம் தேரடி தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாளை ஞாயிற்றுக்கிழமை படாளம், மேலவளம் பேட்டை கூட்டுச்சாலை மற்றும் அச்சிறுப்பாக்கம் சந்தைப் பகுதிகளில் வாகனப் பரப்புரையும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளன.
இதையும் படிங்க: துணை முதல்வர் பதவி... சீமான் மனைவியிடம் டீல் பேசிய ஆதவ் அர்ஜுனா... கடைசியில் நடந்த ட்விஸ்ட்...!
இதன் மூலம் தொகுதியின் பல்வேறு கிராமங்கள் மற்றும் சந்தைப் பகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சி தொடர்கிறது.நாம் தமிழர் கட்சி இந்த இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளது. முந்தைய சட்டமன்றத் தேர்தலில் ஜானகிராமன் சுமார் ஐயாயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த முறை அந்த வாக்கு விகிதத்தை அதிகரித்து, மக்கள் மத்தியில் கட்சியின் கொள்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பரப்புரை அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசியல், அதிகாரம், பணம்..! ஜெம் வீரமணி வலைப்பின்னல் என்ன.? சீமான் சரமாரி கேள்வி..!!