• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசியல், அதிகாரம், பணம்..! ஜெம் வீரமணி வலைப்பின்னல் என்ன.? சீமான் சரமாரி கேள்வி..!!

    ஜெம் வீரமணி, அவருக்கு உதவியவர்கள் என அனைவருக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.
    Author By Nila Wed, 23 Sep 2026 16:37:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman ntk gem veeramani issue

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கு தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூகத்தில் தொழிலதிபராக அறியப்பட்ட ஜெம் வீரமணி நிகழ்த்திய பாலியல் குற்றங்களும், அதுதொடர்பாக அடுத்தடுத்து வரும் செய்திகளும் பேரதிர்ச்சி தருவதாக அவர் குறிப்பிட்டார்.உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் போல, பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட கோரப் பாலியல் வன்முறைகள் தமிழ்நாட்டையே உறைய வைத்திருப்பதாகவும், பெரும் அதிர்வை நாடெங்கிலும் ஏற்படுத்தியிருப்பதாகவும் சீமான் தெரிவித்தார்.

    கல்விக்கு உதவி செய்வதாகக் கூறி, விளிம்பு நிலையிலிருக்கும் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.முந்தைய திமுக ஆட்சியிலேயே ஜெம் வீரமணி மீது ஆதாரத்தோடு புகார் அளிக்கப்பட்டபோதிலும், வழக்கு மட்டும் தொடுத்துவிட்டு கைது செய்யாமல் விட்டதும், போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி நீதிமன்றத்தில் காவல்துறை கையை விரித்து வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைந்ததும் கடும் கண்டனத்திற்குரியது என்று சீமான் விமர்சித்தார்.

    பெண் குழந்தை வன்கொடுமை செய்யப்படும் காணொளி ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டும், ஜெம் வீரமணி உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்யவும், அவர்களது முகத்திரையைக் கிழித்து தண்டனையைப் பெற்றுத் தரவும் முயற்சி எடுக்காதது வெட்கக்கேடானது என அவர் கூறினார். மேடைகளில் பெண்ணுரிமை, சமத்துவம், விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்கில் முந்தைய திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கான செயல்பாடு ஏற்கவே முடியாத கொடுந்துரோகம் என்று அவர் தெரிவித்தார். இவ்வன்கொடுமை வழக்கில், முந்தைய அரசின் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்காது நடவடிக்கை கோரிய சிறப்பு போக்சோ நீதிமன்றத்தின் செயல்பாடே வழக்கில் நீதியை நோக்கிய முன்நகர்வைச் சாத்தியப்படுத்தியிருப்பதாக அவர் பாராட்டினார்.

    இதையும் படிங்க: “சித்தாந்தம் வேண்டாம்... சினிமா போதும்...” - இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெகவை விட்டு விளாசிய சீமான்...!

    gem veeramani

    ஜெம் வீரமணி பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைப் பல ஆண்டுகளாக செய்து வந்ததும், அதன் பின்புலத்தில் பெரும் வலைப்பின்னல் இருக்கிறது என்பதுவுமான செய்திகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக சீமான் சுட்டிக்காட்டினார். இதில் தொடர்புடைய அத்தனைக் குற்றவாளிகளும், துணைபோன முந்தைய அரசின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணவோட்டமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார். பெண் குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய பேரவலம் நிகழ்த்தப்பட்டது தெரிந்தும், நடவடிக்கை எடுக்காது அலட்சியம் காட்டி, குற்றவாளிகளைத் தப்பிக்கவிடத் துணிந்த காவல்துறை அதிகாரிகள் அத்தனைப் பேர் மீதும் துறைசார்ந்த நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டியது பேரவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இந்த வழக்கை அரசியல் சண்டையாகவோ, தேர்தல் காலப் பரப்புரைக் கூச்சலாகவோ மட்டும் பயன்படுத்திவிட்டு முடித்துவிடக் கூடாது என எச்சரித்த அவர், வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து நபர்கள், உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி, அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்றார்.

    ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக மேலாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுமே பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதில் முற்றிலுமாகத் தோற்றுப்போய்விட்டன என்று சீமான் குற்றம் சாட்டினார். பொள்ளாச்சி பாலியல் கொடூரம், சிவகங்கைச் சம்பவம் முதல் நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் பிஞ்சுக்குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வரை தமிழகத்தில் நிலவும் மிக மோசமான நிலையை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார். குற்றம் செய்தால் பணத்தையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி மிக இலகுவாகத் தப்பித்துவிடலாம் என்ற எண்ணமே ஜெம் வீரமணி போன்றவர்கள் துளியும் பயமின்றி இத்தகையக் குற்றங்களில் ஈடுபடக் காரணமாக அமைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

    ஒரு தொழிலதிபர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண் குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்பது எவ்வளவு மோசமான ஒரு இழிநிலை என்று கேள்வி எழுப்பிய சீமான், இந்த 40 ஆண்டுகாலத்தில் இங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களும், காவல்துறையினரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று கேட்டார். இவ்வன்கொடுமை வழக்கையும், விசாரணையையும் துரிதமாக நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகள் அத்தனைப் பேருக்கும் மரணத்தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வெளிநாட்டு மது விற்கலாம்... "கள்" இறக்க கூடாதா..! என்ன நியாயம் CM..? சீமான் கேள்வி.!

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்
    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    அரசியல்
    சாலையில் துண்டு துண்டாய் கிடந்த உடல்கள்... இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோரம்.. சிறுவன் உள்பட 3 பேர் பலி...!

    சாலையில் துண்டு துண்டாய் கிடந்த உடல்கள்... இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோரம்.. சிறுவன் உள்பட 3 பேர் பலி...!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது! உச்ச நீதிமன்றம் பகீர் கருத்து!

    தேர்தல் ஆணையர் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது! உச்ச நீதிமன்றம் பகீர் கருத்து!

    தமிழ்நாடு
    20 நாளில் ராஜினாமா செய்த தவெக வேட்பாளரை தோற்கடியுங்கள்! மதுராந்தகத்தில் பெ.சண்முகம் ஆவேசம்!

    20 நாளில் ராஜினாமா செய்த தவெக வேட்பாளரை தோற்கடியுங்கள்! மதுராந்தகத்தில் பெ.சண்முகம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆசிய பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை! முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    ஆசிய பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை! முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share