விஜயின் புதுவை மக்கள் சந்திப்பு குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்துள்ளார். செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் கடுமையாக காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலம் மக்கள் சந்திப்பு தள்ளி போடப்பட்ட நிலையில், அண்மையில் காஞ்சிபுரத்தில் உள்ளரங்கத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்காது என்பதால், புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டார். ஆனால் புதுச்சேரி காவல்துறையோ ரோடு ஷோ நடத்த அனுமதி தர முடியாது, வேண்டுமானால் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளுங்கள் என அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து இன்று தவெக பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் விஜயை சந்திக்க திரண்டு இருந்தனர். 11 மணி அளவில் விஜய் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார் அப்போது திமுக அரசை சாடினார். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் புதுச்சேரி மக்கள் சந்திப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: கடலில் விழுந்து காணாமல் போன மீனவர்... கண்டுக்காம இருக்கீங்களே?.. சீமான் ஆதங்கம்...!
அப்போது, நான் 2 நாட்களுக்கு முன் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து உளுந்தூர்பேட்டையில் பொதுக்கூட்டம் நடத்தினேன் என்றும் அதை பற்றி எத்தனை கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்டீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார். இவருக்கு ஒரு சீட்டு எடுங்கனு கிளி ஜோசியக்காரன் மாதிரி என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்றும் சீமான் தெரிவித்தார். விஜய் புதுச்சேரி பொதுக்கூட்டம் குறித்த கேள்விக்கு சீமான் இவ்வாறு பதிலளித்தார்.
இதையும் படிங்க: “கிளி ஜோசியக்காரன் மாதிரி...” - விஜய் பற்றிய கேள்வியால் செம்ம டென்ஷன் ஆன சீமான்...!