பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமலாக்கத்துறை சோதனை வந்தால்தான் முதலமைச்சர் ஸ்டாலின் மோடியை சந்திக்க செல்வதாக விமர்சித்தார். மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதவர் இந்த ஆண்டு செல்வது ஏன் என சீமான் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!

நீதிமன்றம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்றால் சட்டமன்றமும் நாடாளுமன்றமும் எதற்கு என்று கேள்வி எழுப்பிய அவர், டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டதை விமர்சித்து பேசினார். ஈடி ரெய்டு வந்தால் ஓடிப்போய் மோடியை பார்ப்பதாக சீமான் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் அரசியல் களம்... முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்!