நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இல்லம் தேடி அரசு என்று கோடிகளை கொட்டி விளம்பரம் செய்கிறார்கள் என்றும் எப்போதும் திராவிட கட்சிகள் மற்றும் ஆட்சிகள் செய்தி அரசியல் தான் செய்வார்கள் என்றும் சேவை அரசியலை வழியில் செயல் அரசியலும் அவர்களுக்கு தெரியாது செய்யவும் மாட்டார்கள் என்று கூறினார்.
சட்டசபையில் ஸ்டாலின் மூன்றாண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது என்று கூறுகிறார் இதில் பெருமைகளை என்ன இருக்கிறது என்று கேட்டார் அப்படி என்றால் இந்த அரசும் முந்தைய அரசுகளும் மக்களுக்கு ஒரு லட்சம் பிரச்சனைகளை கல்லெடுத்து இருக்கிறது ஒரு லட்சம் போராட்டங்களை அவர்களிடம் திணித்திருக்கிறது என்பதுதான் அர்த்தம் என்று தெரிவித்தார்.
பல போராட்டங்களுக்கு அனுமதியே இல்லை என்று கூறிய அவர், ஒவ்வொரு பிள்ளையும் உலகத்திற்கு காட்டுவது ஆசிரியர்கள் என்றும் அப்படிப்பட்ட ஆசிரியர்கள் வீதியில் நிற்கிறார்கள் என வருத்தம் தெரிவித்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர் பணியை முழு நேர நிரந்தர பணியாக மாற்றி தருவேன் என்று உறுதி அளித்ததாகவும் அவரது 181வது விதியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கம்பி கட்டுற கதையெக்கெல்லாம் சொல்லிகிட்டு.. திருச்சி சிவாவிற்கு சீமான் பதிலடி..!

அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சொல்லி ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பகுதி நீர் ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள் ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது விரைவில் அறிவிப்பு வரும் என்று மட்டும் தான் கூறுகிறார்கள் என்று தெரிவித்தார்.
ஜூலை எட்டாம் தேதி தொடங்கிய போராட்டம் இன்று வரை ஓயவில்லை என்றும் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆசிரியர்கள் வீதியில் நிற்கும் போது நான் வீடு தேடி போகிறேன் என்கிறார்கள்., 14 ஆயிரம் பேர் ஆசிரியர் பணி நியமனத்திற்கு தேர்வு எழுதி காத்துக் கொண்டிருப்பதாக கூறினார். நீங்கள் வீடு தேடி போகிறீர்கள் நாங்கள் ரோடு தேடி போராடுகிறோம் என்றார். உடல் உறுப்புகள் திருடப்படுவதாகவும், திருடர்கள் கூட்டத்திற்கு நாட்டை கொடுத்தால் திருட்டு நடக்காமல் என்ன நடக்கும் என்று சீமான் கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: ஆடு, மாடு முடிஞ்சிது.. நெக்ஸ்ட் மரங்கள்.. இயற்கையைப் பாதுகாக்க அடுத்த மாநாட்டை அறிவித்தார் சீமான்..!